நாட்டில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லையெனவும் எதிர்வரும் திங்கள் இது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் நாடு தழுவிய லொக்டவுன் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான அவசியமில்லையென நேற்றைய தினம் இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.
எனினும், தினசரி தொற்று விகிதம் அதிகரித்துச் செல்வதுடன் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5017 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் திங்கள் இது தொடர்பில் ஆலோசிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment