ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் இடம் வெற்றிடமாகியுள்ளதாக அறிவித்துள்ளார் சபாநாயகர்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறி போவதைத் தவிர்ப்பதற்கு நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனற்றுப் போயுள்ள நிலையில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில், சமகி ஜனபல வேகய ஊடாக அதற்கடுத்த நிலையில் தெரிவான நபர் ரஞ்சனின் இடத்துக்கு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment