யாழ் மாநகர சபையில் புதிய பாதுகாப்பு பிரிவொன்றை உருவாக்கி, அதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்ட வகையிலான சீருடை வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பின்னணியில் யாழ் மேயர் வி. மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் நகர்ப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் தண்டப்பணம் அறவிடும் நோக்கில் ஐவர் கொண்ட இக்குழுவை உருவாக்கியதாக மணிவண்ணன் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment