நீதிமன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக, ஏலவே பாலியல் துஷ்பிரயோகம் உட்பட குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரைத் தலைவராக்கி அவரின் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்துள்ள ஒரே நாடு இலங்கையென தெரிவிக்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.
பல்வேறு ஊழல், கொள்ளை மற்றும் துஷ்பிரயோக வழக்குகளின் பின்னணியில் நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இவ்வாறு குற்றவாளிகளின் கையிலேயே வழங்கியிருப்பது நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற உரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment