திஹாரி: தஸ்மினா முன்னெடுப்பில் உலர் உணவு விநியோகம் - sonakar.com

Post Top Ad

Friday, 23 April 2021

திஹாரி: தஸ்மினா முன்னெடுப்பில் உலர் உணவு விநியோகம்

 


அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் தஸ்மினா அமைப்பின் முன்னெடுப்பில் ரமழான் காலத்தில் உலர் உணவு விநியோக நடவடிக்கைகள் இம்முறையும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது.


இப்பின்னணியில், திஹாரிய ஈமானியா அரபிக் கல்லூரியில் இவ்வாரம் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன் அண்மையில் ரத்னபுர தாருல் உலூம் மதரசாவிலும் இது போன்று உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


வட அமெரிக்காவின் இலங்கை முஸ்லிம்களுக்கான தாய் அமைப்பாக இயங்கும் தஸ்மினா, பல்வேறு சமூக நல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment