20ம் திருத்தச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் வாக்களிக்காமல் அவர்களது கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்த விதம் அரசியல் 'டீல்' ஒன்றின் வெளிப்பாடு என தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
அதற்கு சில தினங்களுக்கு முன்பாக ரிசாதின் சகோதரர் கைது செய்யப்பட்ட போதே தான் இது பற்றி தெரிவித்ததாகவும் அப்போது அது மறுக்கப்பட்ட போதிலும் பின்னர் வாக்கெடுப்பின் போது நடந்த விடயங்கள் அந்த டீலை உறுதிப்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திருப்திகரமாக நடாத்தவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய்யாது காட்டப்படும் காட்சிகள் எவ்விதத்திலும் நம்பக் கூடிய வகையில் இல்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment