தன்னைக் கொலை செய்யலாம் ஆனாலும் தனது வாயையடைத்து கட்டுப்படுத்த முடியாது என சவால் விடுத்துள்ளார் அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக இந்த அரசாங்கம் இயங்கவில்லையென ஆனந்த தேரர், விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில கூட்டணி தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விஜேதாச ராஜபக்சவும் இவ்வணியில் இணைந்து அபயராம விகாரையில் செய்தியாளர் சந்திப்பு நடாத்தி வருகிறார்.
இப்பின்னணியில், ஜனாதிபதி நேரடியாக ஆனந்த தேரரை தொடர்பு கொண்டு பேசியிருந்ததாகவும் தகவல் வெளியிட்டிருந்த அவர், மஹிந்தவை ஆட்சிபீடமேற்றிய தம்மை கோட்டாபே ராஜபக்சவினால் கட்டுப்படுத்த முடியாது எனவும் வேண்டுமென்றால் தன்னைக் கொலை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரமுனவினரிடையே எழுந்துள்ள உட்கட்சி பூசல்கள் அதிகாரப் போட்டியாக வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment