இரவில் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு ஏதுவாக ஹோட்டல்களில் அதிகாலை 1 மணி வரையிலும் மது பானம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே.
நாடு தொடர்ச்சியாக கடனிலேயே பயணித்துக் கொண்டிருப்பதாகவும் இதனால் எதிர்கால தலைமுறையும் கடனாளிகளாக இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், இரவு பொருளாதாரம் அவசியப்படுவதாகவும் இதன் பின்னணியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏலவே அனுமதி பெற்றுள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் அதிகாலை 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மது பான விற்பனை நிலையங்கள் காலை 9 மணிக்குத் திறக்கின்ற போதிலும் அந்த நேரத்தில் யாரும் குடிப்பதில்லையெனவும் மாற்றீடாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைப்பதன் ஊடாக உள்ளூர் குடிகாரர்கள் மூலமாகவும் இரவு பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என அவர் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளமையும் தொடர்ந்தும் 'கஞ்சா' ஏற்றுமதியை அவர் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment