மது போதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளைப் பிடிக்கவென விசேட நடவடிக்கையொன்றை இம்மாதம் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வாகன விபத்துகளும் அதனூடான உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பொலிசார் இந்நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இந்நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதோடு விசேட வீதி தடுப்புகளை ஏற்படுத்தி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment