குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தி உடைத்த குற்றச்சாட்டில் கைதான இந்திய நபர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.
வாரியபொல சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நபர், திடீர் சுகயீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்திருந்த குறித்த நபர், மது போதையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment