மாவனல்லை வைத்தியர் ஒருவரின் சகோதரருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்குவதற்கான 'கட்டில்' இல்லாது போன நிலையில் அவர் உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 24ம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த குறித்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அதேவேளை 25ம் திகதி மூச்சுத் திணறலால் அவதியுற்ற போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், மேலதிக கட்டில் வசதியை ஏற்பாடு செய்ய முடியாது போன நிலையில் நிலைமை மோசமடைந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கேகாலை வைத்தியசாலையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்கு ஏற்ப மூன்று கட்டில்களுடனான வசதிகள் இருந்தும் அங்கு அதற்குத் தேவையான செயற்குழுவொன்று இல்லாத நிலையில் அதற்கான செயற்பாடு முடங்கிப் போயிருப்பதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment