இலங்கையில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக மாத்திரமே வெள்ளைக்காரர்களை கவரும் சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்ற முடியும் என்கிறார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே.
அவரது இரவு பொருளாதார திட்டம் தொடர்பில் மேலதிக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நாட்டை முன்னேற்றுவதற்கு சமயம் மற்றும் கலாச்சாரம் தடையாக இருப்பதாகவும் இலங்கை தாய்லாந்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கிறார். தாய்லாந்து பௌத்த நாடடாக இருக்கின்ற போதிலும் அங்கு விபச்சாரம் மிகப் பெரும் வர்த்தகம் என அதற்கு அவர் விளக்கமுமளித்துள்ளார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் கடன்சுமையைக் குறைக்க அண்மைக்காலமாக டயானா இவ்வாறான 'இரவு' பொருளாதார திட்டங்களை முன் வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment