ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை மீண்டும் கட்டியமைக்கும் பணியில் சந்திரிக்காவின் பங்கும் அவசியப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் அவரை கட்சியோடு இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் தயாசிறி ஜயசேகர.
கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாகக் கலைத்து விட்டு மீண்டும் புதுப்பிக்குமாறு சந்திரிக்கா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்துள்ள தயாசிறி, கட்சியோடு இணைந்து செயற்பட முன்னாள் ஜனாதிபதி முன் வருவாரேயானால் அவருக்குரிய கௌரவத்துடன் அவரை வரவேற்கக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார்.
பெரமுனவில் இடம்பெற்று வரும் உள்முரண்பாடுகளால் முன்னாள் சு.க உறுப்பினர்கள் மீண்டும் தாய்க் கட்சியோடு இணைவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment