திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஆளுனர் உத்தரவில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் வேகத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் பின்னணியில் ஆளுனர் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் தினசரி 500க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment