'மீட்டர்' திருட்டு: தெரனியாகல பி.சபை தலைவர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 17 April 2021

'மீட்டர்' திருட்டு: தெரனியாகல பி.சபை தலைவர் கைது

 


தேசிய நீர்வழங்கல் சபைக்குச் சொந்தமான சுமார் 475 தண்ணீர் மீட்டர்கள் திருடு போயிருந்த நிலையில் அதில் ஒரு தொகையை தன் வசம் வைத்திருந்த தெரனியாகல பிரதேச சபை தலைவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபரின் வசமிருந்து 90 மீட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இன்று அவர் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பொறியியலாளர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment