கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசின் நிகழ்ச்சித் திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
தடுப்பூசி தயாரிப்பை இந்திய நிறுவனம் இடை நிறுத்தியுள்ள நிலையில் அடுத்த தொகை எப்போது கிடைக்கும் என்ற தேதி நிச்சயம் இல்லையெனவும் இப்பின்னணியில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதன் கிழமை இரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சீனாவும் 6 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதுடன் முன்னர் இந்தியாவிலிருந்து 5 லட்சம் தடுப்பூசிகள் இனாமாக கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment