அரச புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு ஈஸ்டர் தாக்குதல்தாரி சஹ்ரானுடன் தொடர்பிருந்ததாக அண்மையில் கருத்துரைத்த நளின் பண்டார இன்று சி.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சமகி ஜனபலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அண்மையில் இவ்வாறு கருத்துரைத்திருந்தார்.
இதன் பின்னணியில் ஜெனரல் சலே மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment