நேருக்கு நேர் மோதி சண்டையிட்டுக் கொள்ள நாடாளுமன்றுக்கு வெளியே வருமாறு சரத் பொன்சேகாவும் சமல் ராஜபக்சவும் சவால் விட்டுக் கொண்ட சம்பவம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பிலான சர்ச்சை வெடித்திருந்த நிலையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றம் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. இந்நிலையில், சமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகளால் கோபமடைந்த அவர், நேருக்கு நேர் மோதிக் கொள்ள அழைக்க, பதிலுக்கு சரத் பொன்சேகாவும் சவால் விடுத்த நிலையில் சபை அமர்வு அமைதியிழந்தது.
இந்நிலையிலேயே, நேரடியாக மோதி சண்டையிட்டுக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment