கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆபத்து அதிகமாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாணத்திலிருந்தும் பெருமளவு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலை வசதிகளும் இறுக்கமான நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment