கார்டினல் மல்கம் ரஞ்சித் இரட்டை வேடம் போடுவதாக சாடியுள்ளார் பொது பல சேனாவின் ஞானசார. ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேவையிருந்த ஒரு அரசியல் சக்தியாலேயே நடாத்தப்பட்டது என கார்டினல் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கார்டினலுக்கு பிரச்சினையிருந்தால் அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மாறாக இவ்வாறு கருத்துரைப்பது தீவிரவாதத்துக்கு மேலும் தீனி போட்டு அங்கீகரிப்பதாகி விடும் எனவும் ஞானசார தெரிவிக்கிறார்.
இதேவேளை, தான் கூறிய கூற்று தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் 'சர்வதேச' அரசியல் சக்தியொன்றே தமது ஆளுமையை பலப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்ததாகவும் கார்டினல் மறு விளக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment