இலங்கைக்கு ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் கோட்டாபே ராஜபக்ச ஹிட்லராக அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் அண்மையில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதர் பதிலளித்துள்ளார்.
பல மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கும், மனித அவலங்களுக்கும் காரணமாக இருந்த ஹிட்லர் உலகில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்னுதாரணமாக இருக்க முடியாது என அவர் திலுமுககு பதிலளித்துள்ளார்.
இதேவேளை, தன்னைக் கடுமையான, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போன்ற நபராகப் பார்க்கவே பௌத்த தேரர்கள் விரும்புவதாக சில மாதங்கள் முன்பாக ஜனாதிபதி பொது நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்திருந்தமை நினைவூட்'டத்தக்கது.
No comments:
Post a Comment