முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து, அவர் இன்னும் ஆடை அணிந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறாரா என அண்மையில் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்த கருத்து தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்ரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவருக்கு தண்டனை வழங்க ஏன் தாமதமாகிறது? எனவும் கார்டினல் அண்மையில் விசனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, கார்டினலின் பேச்சு தனக்கு வருத்தமளிப்பதாக இன்று நாவல பகுதியில் இடம்பெற்ற கட்சி சந்திப்பொன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment