ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தான் அரசியல் முடிவொன்றை எடுக்கப் போவதாகவும் அதனை நாடாளுமன்றில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோயுள்ள நிலையில் அவரது இடத்துக்கு அஜின் மன்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், ரஞ்சன் சார்பில் தான் முடிவொன்றை எடுக்கப் போவதாக ஹரின் தெரிவிக்கின்றார். ஹரின் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ரஞ்சனை தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment