சஹ்ரானுடன் பழகிய சிலர் இன்னும் நாடாளுமன்றில் இருப்பதாகவும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதாகவும் தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர் என்பது தெளிவாகியுள்ள போதிலும் அது குறித்தும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, வெட்கமில்லாமல் சிறிசேன குழு இன்னுமொரு தேர்தலுக்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment