அரசு தொடர்பான விடயங்களை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்துக் கூட பேசாது ஊடகங்கள் ஊடாக கருத்து வெளியிட்டு வரும் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
எதிர்பார்த்த அமைச்சுப் பதவி கிடைக்காத நாளிலிருந்து அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் விஜேதாச, தான் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதாக தெரிவிக்கிறார். இந்நிலையில், துறைமுக நகரம் பற்றி அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களும் கேள்விகளும் கட்சிக்குள் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
இப்பின்னணியிலேயே அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கெஹலிய தெரிவிக்கின்றமையும், விஜேதாசவுக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதே மாற்றுவழியென கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment