தன்னைத் தானே ஜனாதிபதி சட்டத்தரணியெனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எனவும் தெரிவித்து பலரை ஏமாற்றித் திரிந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
38 வயதான குறித்த நபர், பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பலரிடம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்து வந்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களோடு 'நெருக்கம்' உள்ளவர்களாக தெரிவித்து பல இடங்களில் இவ்வாறு மக்களை ஏமாற்றும் நபர்கள் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment