ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற பதவி பறிப்புக்கு எதிராக சமகி ஜன பல வேகயவினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், இன்று சபை அமர்வு ஐந்து நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டியணிந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்த அதேவேளை சபாநாயகரின் தீர்மானத்தை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களினால் சபையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.
இதேவேளை, சமல் ராஜபக்ச சபாநாயகராக இருந்த போது தனக்கும் இவ்வாறு அநீதியிழைக்கப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment