ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியெறும் அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 April 2021

ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியெறும் அமெரிக்கா!

 


ஆப்கானிஸ்தானிலிருந்து தமது நாட்டு இராணுவத்தை முழுமையாக மீள அழைக்கப் போவதாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்.


20 வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் நடந்த தாக்குதல் ஒன்றைக் காரணம் காட்டி அங்கு சென்ற போதிலும் இன்னும் அங்கு நிலைத்திருப்பதற்கான காரணம் எதுவுமில்லையெனவும் தன்னோடு சேர்த்து நான்காவது ஜனாதிபதியின் காலம் வரை இது நீண்டிருப்பதாகவும் இதற்கு மேலும் தொடர அனுமிக்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இப்பின்னணியில் 2021 செப்டம்பர் 11ம் திகதியோடு எஞ்சியிருக்கும் 2500 இராணுவத்தினரையும் மீள அழைக்கவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்கா நீண்ட இந்த போரில் தோல்வியடைந்து விட்டதாகவும் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தலிபான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment