கட்டுப்பாட்டு விலையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் தரமான தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.
இப்பின்னணியில், போத்தல் ஒன்றின் விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க நிலையங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணைகளில் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக அண்மைக்காலமாக வாத - விவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment