விடுதலைப் புலிகள் அமைப்பினர் வட புல பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது கொண்டிருந்த அதிகாரங்களை விட அதிக அதிகாரங்கள் துறைமுக நகருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அரசின் துறைமுக நகர சட்டமூலம் அனுமதிக்கப்படுமானால் அதுவே நடைபெறப் போகிறது எனவும் அதனூடாக அரசாங்கம் சொல்லி வந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் முடிவுக்கு வந்து ஒரு நாடு இரு சட்டங்கள் உருவாகும் என மேலும் விளக்கமளித்துள்ளார்.
துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் அப்பகுதியை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றி, அங்கு தனி நாடொன்று இயங்குவது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விடும் எனவும் அதனூடாக சீன காலனித்துவம் ஆரம்பிக்கும் எனவும் அரசியல் மட்டத்தில் காரசாரமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை அரசாங்கம் அதனை மறுத்து வருகின்றமையும் நீதியமைச்சர் அலி சப்ரி அதனை நிராகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment