கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் முகக் கவசம் அணிவதின் அவசியம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டும் விசேட நடவடிக்கையொன்றை மேல் மாகாணத்தில் நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் சிவில் உடையில் மக்களை அணுகி இது தொடர்பில் பொலிசார் அறிவுறுத்தியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோருக்கு முகக்கவசம் அணிவதின் அவசியம் புரியாமல் இருந்ததாகவும், பலருக்கு பாதுகாப்பான முறையில் அணிவது எப்படியென்பது தொடர்பில் கவனமில்லாமல் இருந்ததாகவும், மேலும் பலருக்கு சமூக இடைவெளியைப் பேண வேண்டியதன் அவசியம் புரியாமல் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கான விசேட குழுக்கள், மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் களப்பணியாற்றியதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment