அவிஸ்ஸாவலயில் பழைய இரும்புப் பொருட்களை கொள்வனவு செய்யும் வர்த்தக மையத்தில், எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்டுவதற்கு முயன்ற நிலையில் அது வெடித்ததன் ஊடாக ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கவனயீனத்தினால் இடம்பெற்ற சம்பவம் என்றே கருதப்படுகின்ற அதேவேளை இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அரச பகுப்பாய்வு நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment