பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சியின் விலை வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்த விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் சில்லறை விவை அதிக பட்சமாக 600 ரூபாய் என இணக்கம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கிறது.
சில இடங்களில் கோழி இறைச்சி கிலோ 800 ரூபாவுக்கு விற்கப்படுவதாக முறைப்பாடுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment