பெரமுனவில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ள விமல் வீரவன்ச, அங்கு அழையா விருந்தாளியாக மாறி வருகின்ற நிலையில் சம்பிக்க ரணவக்கவுடன் கூட்டிணைந்து அரசியலை முன்னெடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்த விமல், பக்க வாட்டில் தனது கட்சியையும் திறமையாக வளர்த்துக் கொண்டுள்ளார். தற்சமயம், பசில் ராஜபக்ச மற்றும் வியத்மகவினருடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ள விமல் தொடர்ந்து பல அழுத்தங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையிலேயே, பல்வேறு புதிய தகவல்களை விமல் தரப்பு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியில் சம்பிக்க ரணவக்கவுடன் கூட்டிணைவது தொடர்பிலும் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment