98 கடவுச் சீட்டுகளைக் கைவசம் வைத்திருந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரகம, பொல்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் கைவசம் 210,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு ஆள் கடத்துவதற்கான ஏற்பாடுகளில் குறித்த நபர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment