இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜை மூன்று தினங்கள் தடுத்து வைப்பதற்கான நடவடிக்கையெடுத்துள்ள பொலிசார், அவர்களை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு 'நேரடியாக' உதவிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தமது கை சுத்தமானது எனவும் தாம் எதுவித குற்றமும் செய்யவில்லையெனவும் கைதாவதற்கு முன்பாக காணொளியூடாக ரிசாத் பதியுதீன் தன்நிலை விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment