ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதையொட்டி தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ம் திகதி பல தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களினால் 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். அத்துடன் இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் இறந்து விட்டதாகவும் எஞ்சியிருந்த சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இவ்வருட நினைவு நிகழ்வுகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தலைமையிலான குழுக்கள் கண்காணித்து, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment