ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் 2018ம் ஆண்டளவில் அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் குண்டு வெடிப்பொன்றினை நிகழ்த்தி பரிசோதித்தும் பார்த்துள்ளமை தொடர்பில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.
கல்முனை பொலிசாரால் கைது செய்யப்பட்ட ராசிக் ரசா எனும் நபரே இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளதாகவும் சஹ்ரானின் சகோதரன் இந்த பரிசோதனையின் போதே காயத்துக்குள்ளானதாகவும் ரசா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வெடிபொருட்களை வழங்கி, அவற்றை மறைத்து வைப்பதற்கான நடவடிக்கைக்குத் இந்நபரே உதவியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment