இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் அங்கு மரணங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
எனினும், இவ்வெண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசு வெளியிட்டிருக்கும் தகவலே இவ்வாறு இருக்கின்ற அதேவேளை புதன்கிழமை தகவலின் அடிப்படையில் ஒரே நாளில் 362,902 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
உலகின் முக்கிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அதேவேளை அங்கு ஒக்சிஜன் தட்டுப்பாடும் தொற்று விகிதமும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment