இலங்கையில் வியாழன் (28)ம் திகதி 1531 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இப்பின்னணியில் கடந்த மூன்று தினங்களாக ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மொத்த எண்ணிக்கை தற்போது 106484 ஆக இருக்கின்ற அதேவேளை, இதில் 95445 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய மரண எண்ணிக்கை 661 என்பதோடு தொடர்ந்தும் 10378 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment