நேற்றைய தினம் அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுனர் அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சியை கடுமையாக விமர்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட அசாத் சாலிக்கு ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் தொடர்புகள் உள்ளதா எனவும் விசாரிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னைய அரசினால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியையும் மீட்டெடுத்துள்ள நிலையில், 2019ம் ஆண்டின் பின்னர் அதற்கான அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர். எனினும், முன்னர் அனுமதிப் பத்திரம் பெற்றே வைத்திருந்த குறித்த துப்பாக்கி தொடர்பில் இனவாத ஊடகங்கள் வேறு வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக அசாத் சாலிக்கு நெருங்கிய வட்டாரங்கள் சோனகர்.கொம்மிடம் கவலை தெரிவித்தன.
இந்நிலையில், அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரிக்கவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றமையும் கடந்த வருடம் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளின் வீடுகளும் சோதனையிடப்பட்ட போதும் அசாத் சாலியின் வீடு சோதிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றியும் அவர் சாட்சியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment