நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கு எதிரான இடைக்கால தடை தொடர்பில் ஏப்ரல் 5ம் திகதி தீர்ப்பளிக்கவுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாயின் பிரதிவாதிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் வழக்காடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மரண தண்டனைக் கைதிகள் நாடாளுமன்றம் வந்து செல்கின்ற நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது அநீதியானது எனவும் அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி தொடரப்பட்ட வழக்கினூடாக ரஞ்சனின் பதவி பறிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment