பொதுபல சேனாவின் ஞானசாரவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதான ஆலோசகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் ஞானசாரவின் செயற்பாடுகள் தொடர்பு படுத்தப்பட்டிருப்பது தவறெனவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பல்வேறு முக்கிய தகவல்களை வெளிக் கொண்டு வந்தவர் என்ற அடிப்படையில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆலோசகராக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கம்மன்பில விளக்கமளிக்கிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அடிப்படைவாத - பிரிவினை நடவடிக்கைகளைத் தூண்டியதில் ஞானசாரவின் பங்கிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் செய்த சதியென ஞானசார சொல்லி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment