லொறி சாரதியை தாக்கிய கான்ஸ்டபிள் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 March 2021

லொறி சாரதியை தாக்கிய கான்ஸ்டபிள் கைது

 


நேற்றைய தினம், பன்னிபிட்டிய பகுதியில் லொறி சாரதியொருவரை நடு வீதியில் வைத்து தாக்கி, ஏறிப் பாய்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


லொறி சாரதியின் கவனயீனத்தினால் போக்குவரத்து ஓ.ஐ.சி விபத்துக்குள்ளானதன் பின்னணியில் கோபமடைந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு லொறி சாரதியை தாக்கியதாக கூறப்படுகிறது.


நேற்றைய தினமே குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில் கான்ஸ்டபிள் இடை நிறுத்தப்பட்டிருந்த அதேவேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment