தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பலவந்தமாக அபகரித்து அதில் அவரது அரசியல் நடவடிக்கைகளை செய்து வருவதாகக் கூறி நிக்கரட்டிய கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடத்தின் கூரைப் பகுதியில் ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்ட நபரை பொலிசார் கைது செய்ய முயன்ற போதே அவர் இவ்வாறு கட்டிடத்திலிருந்து விழுந்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடாத்துவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment