2015ம் ஆண்டு ஒருவரைக் கடத்திச் சென்று கட்டப்பஞ்சாயத்து நடாத்திய விவகாரத்தின் பின்னணியில் இடம்பெற்று வரும் வழக்கில் ஆஜராகத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்பு பட்ட ஏனையோர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த நிலையில் 12 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும், ஹிருனிகா தன் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வருகின்ற நிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment