புர்கா அணிவது 'சமய' தீவிரவாதம்: சரத் வீரசேகர - sonakar.com

Post Top Ad

Saturday, 13 March 2021

புர்கா அணிவது 'சமய' தீவிரவாதம்: சரத் வீரசேகர

 


புர்கா அணிவது சமய தீவிரவாதத்தின் அடையாளம் என தெரிவிக்கிறார் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர.


இலங்கையில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இன்று தகவல் வெளியிட்டிருந்த அவர், குறித்த ஆடை சமய தீவிரவாதத்தின் அடையாளம் என விபரித்துள்ளார்.


பொது இடங்களில் புர்கா அணிவதற்குத் தடை கொண்டு வரப்போவதாகவே முன்னர் நீதியமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் தற்போது இலங்கையில் புர்கா அணிவதை முற்றாகத் தடை செய்யப் போவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment