நாட்டில் உள்ள எல்லா மதரசாக்களையும் மூடப் போவதாக தான் ஒரு போதும் தெரிவிக்கவில்லையென தன் நிலை விளக்கமளித்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
மதரசாக்கள் தொடர்பான அவரது கூற்றுக்கு நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து எஸ்.எம். மரிக்கார் வெளியிட்ட விமர்சனத்தையடுத்து இவ்வாறு விளக்கமளித்த சரத் வீரசேகர, 5 முதல் 16 வயது வரையான காலப்பகுதியில் இலங்கையின் அனைத்து மாணவர்களும் கற்க வேண்டிய பாடத்திட்டங்களையும் சேர்த்து கற்பிக்காமல் தனியாக அரபு மொழி மற்றும் குர்ஆனை மாத்திரம் கற்பிக்கும் மதரசாக்களையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment