நடைமுறை அரசு பல்வேறு கோணங்களில் வலுவிழந்து வருவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
நாடு, பாரிய பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அதிலிருந்து வெளி வருவதற்கான முழுமையான, நீண்டகால வேலைத் திட்டம் அவசியப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அவர், கொரோனா சூழ்நிலையில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத சிக்கல்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.
தமது அரசால் முடியாமல் போனதை செய்யப் போவதாக ஊதிப் பெருப்பித்த போதிலும் கோட்டா அரசு அதில் தோல்வி கண்டுள்ளதாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment