பங்களதேஷின் 50 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் நிமித்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அந்நாட்டுக்கு விஜயம் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச 17 முதல் 10 தினங்களுக்கு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நீண்ட நாட்களின் பின் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நேபாள், இந்தியா, பூட்டான் மற்றும் மாலைதீவு தலைவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment